திருக்கோவிலூர் அருகே ரேஷன் அரிசி கடத்தல்; சரக்கு வாகனம் பறிமுதல்


திருக்கோவிலூர் அருகே ரேஷன் அரிசி கடத்தல்; சரக்கு வாகனம் பறிமுதல்
x

திருக்கோவிலூர் அருகே ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

அரகண்டநல்லூர் போலீசார் திருக்கோவிலூர் அருகே உள்ள கொடுக்கப்பட்டு மெயின் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வாகனத்தை போலீசார் சந்தேகத்தின்பேரில் மறித்தனர். போலீசாரை பார்த்ததும், சரக்கு வாகனத்தை சாலையிலேயே விட்டுவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் அந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்து பார்த்தபோது, அதில் 60 கிலோ எடை கொண்ட 80 சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சரக்கு வாகனத்தையும், ரேஷன் அரிசையையும் பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story