பசை வடிவில் ரூ.1 கோடி தங்கம் கடத்தல்


பசை வடிவில் ரூ.1 கோடி தங்கம் கடத்தல்
x

பசை வடிவில் ரூ.1 கோடி தங்கம் கடத்தப்பட்டது.

திருச்சி

செம்பட்டு:

1¾ கிலோ தங்கம்

வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது. அந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த 2 பயணிகளை தனியே அழைத்துச்சென்று சோதனை செய்தனர். இதில் அவர்கள் உடலில் மறைத்து 1 கிலோ 800 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

2 பேர் கைது

இதையடுத்து அவர்களிடம் இருந்து பசை வடிவிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 5 லட்சம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து 2 பயணிகளையும் அதிகாரிகள் கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story