அரசு பஸ்சில் புகையிலை பொருள் கடத்தல்;டிரைவர், கண்டக்டர் மீது வழக்கு
அரசு பஸ்சில் புகையிலை பொருள் கடத்திய டிரைவர், கண்டக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நீலகிரி
பந்தலூர்: ஊட்டியில் இருந்து கூடலூர், நெலாக்கோட்டை, பாட்டவயல் வழியாக கேரள மாநிலம் கண்ணூருக்கு செல்லும் தமிழக அரசு பஸ்சில் புகையிலை பொருள் கடத்தி செல்வதாக நெலாக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நெலாக்கோட்டை போலீஸ் சப-்இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட அரசு பஸ்சை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது பஸ் டிரைவரின் பையில் 15 பாக்கெட் புகையிலை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு உடந்தையாக கண்டக்டர் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் நெலாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story