திம்பம் தபால் அலுவலகத்துக்குள் புகுந்த நாகப்பாம்பு; தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

திம்பம் தபால் அலுவலகத்துக்குள் புகுந்த நாகப்பாம்பு; தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
x

திம்பம் தபால் அலுவலகத்துக்குள் புகுந்த நாகப்பாம்பு; தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

ஈரோடு

தாளவாடி

தாளவாடியை அடுத்து உள்ள திம்பம் மலைப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று வழக்கம்போல் பணிக்கு வந்த ஊழியர்கள் அலுவலகத்தை திறந்தபோது, அங்கு நாகப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து ஆசனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் தபால் அலுவலகத்துக்கு விரைந்து சென்று நாகப்பாம்பை லாகவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை மீட்டு ஒரு சாக்குப்பையில் போட்டு வனப்பகுதிக்கு கொண்டு விட்டனர். இந்த சம்பவத்தால் தபால் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story