கோபியில் வீட்டுக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது


கோபியில் வீட்டுக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது
x

கோபியில் வீட்டுக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது

ஈரோடு

கடத்தூர்

கோபி கல்யாணி நகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது54). கட்டிட ஒப்பந்ததாரர். இவர் நேற்று வேலை விஷயமாக வெளியே சென்றுவிட்டார். வீட்டில் அவருடைய மனைவி பத்மாவதி மட்டும் இருந்தார்.

இந்த நிலையில் எங்கிருந்தோ ஊர்ந்து வந்த பாம்பு ஒன்று பெரியசாமி வீட்டின் உள் அறைக்குள் புகுந்தது. இதை பார்த்த பத்மாவதி அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு் வெளியே வந்தார். இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் கோபி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து நிலைய அலுவலர் மாதப்பன் (பொறுப்பு) மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றனர். பின்னர் அறைக்குள் இருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். அப்போது அந்த பாம்பு சுமார் 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு என்பது தெரியவந்தது. பின்னர் அந்த பாம்பை ஒரு பையில் போட்டு அருகே உள்ள வனப்பகுதியில் கொண்டு் சென்றுவிட்டனர்.


Next Story