இருசக்கர வாகன ஷோரூமுக்குள் புகுந்த பாம்பு- தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்


இருசக்கர வாகன ஷோரூமுக்குள் புகுந்த பாம்பு- தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்
x

இருசக்கர வாகன ஷோரூமுக்குள் புகுந்த பாம்பு- தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே உள்ள கரட்டூரில் இருசக்கர வாகன ஷோரூம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஷோரூமுக்குள் நேற்று 8 அடி நீளம் உள்ள சாரை பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. இதை கண்டதும், அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் கோபி தீயணைப்பு நிலைய அதிகாரி முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் இருசக்கர வாகனத்துக்கான உதிரி பாகங்கள் வைத்திருந்த அட்டை பெட்டிக்குள் பதுங்கி இருந்த பாம்பை கண்டனர். உடனே அவர்கள் அந்த பாம்பை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த பாம்பு அவர்களிடம் இருந்து தப்பி ஓடியது. இதையடுத்து மீண்டும் ½ மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் பாம்பை லாவகமாக பிடித்தனர். இதையடுத்து அந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் வனப்பகுதியில் விட்டனர்.


Next Story