தண்ணீர் தொட்டிகளுக்குள் பதுங்கிய பாம்புகள்; வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர்


தண்ணீர் தொட்டிகளுக்குள் பதுங்கிய பாம்புகள்; வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர்
x

தண்ணீர் தொட்டிகளுக்குள் பதுங்கிய பாம்புகளை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்தா மருத்துவ பிரிவு செயல்படுகிறது. இதன் பின்புறம் தண்ணீர் தொட்டி உள்ளது. நேற்று மருத்துவமனை ஊழியர் ஒருவர், அந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றார். அப்போது அதற்குள் பாம்பு புகுந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து அவர் வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலையை அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, தண்ணீர் தொட்டிக்குள் பதுங்கியிருந்த சுமார் 6 அடி நீள சாரை பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.

இதேபோல் வத்தலக்குண்டு காமராஜபுரத்தை சேர்ந்த பரமசிவம் வீட்டின் தண்ணீர் தொட்டிக்குள் பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் வத்தலக்குண்டு தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, தண்ணீர் தொட்டிக்குள் பதுங்கியிருந்த சுமார் 4 அடி நீள பாம்பபை பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த பாம்பபை சித்தூர் வனப்பகுதியில் விட்டனர்.


Next Story