சென்னிமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு- மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு


சென்னிமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு- மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
x

சென்னிமலையில் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலையில் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நகையை பறித்தான்

ஈரோடு பஸ் நிலையம் அருகே கோட்டை பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மனைவி அமுதா தேவி (வயது 38). இவரும், இவருடைய சகோதரி ஜெயலட்சுமி என்பவரும் நேற்று சென்னிமலை முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்கள். இருவரும் சாமி தரிசனம் செய்துவிட்டு முருகன் சன்னதிக்கு பின்புறம் உள்ள சித்தர் கோவிலுக்கு சென்றனர். அங்கும் தரிசனம் செய்துவிட்டு பகல் 1 மணியளவில் படிக்கட்டுகள் வழியாக நடந்து வந்துகொண்டு இருந்தார்கள். அப்போது திடீரென பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் அமுதா தேவியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அமுதா தேவியும், ஜெயலட்சுமியும் திருடன்.. திருடன் என சத்தம் போட்டாகள்.

பரபரப்பு

ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் அமுதா தேவியின் கழுத்தில் இருந்த நகையை பறித்துக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டார். இதுகுறித்து அமுதா தேவி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பெருந்துறை உதவி போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் 15-க்கும் மேற்பட்ட போலீசார் மலைமேல் உள்ள முருகன் கோவில் வனப்பகுதிக்கு சென்று சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணிடம் நகையை பறித்து சென்ற சம்பவம் சென்னிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story