அரசு மையங்களில் இதுவரை 759 டன் நெல் கொள்முதல்


அரசு மையங்களில் இதுவரை 759 டன் நெல் கொள்முதல்
x

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் இதுவரை 759 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

ராமநாதபுரம்

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் இதுவரை 759 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

759 டன் நெல்கொள்முதல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் அரசின் 50 நேரடி நெல்கொள்முதல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் திறக்கப்பட்ட ஒரு வார காலத்தில் இதுவரை 126 விவசாயிகளிடம் இருந்து 759 டன் நெல் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதே போல மற்ற விவசாயிகளும் நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து உரிய விலையை பெற்று பயன் பெற வேண்டும். இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

வங்கி கணக்கு

ஒவ்வொரு மையத்திலும் விவசாயிகள் நேரடியாக வந்து நெல் விற்பனை செய்து அதற்குரிய பணத்தை தங்கள் வங்கி கணக்கில் வரவு வைத்து கொள்ளலாம். கொள்முதல் நிலையத்தில் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

மேலும் விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட உள்ளது.

இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.


Related Tags :
Next Story