சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி


சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-20T00:15:15+05:30)

தட்டார்மடம் பகுதியில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி தட்டார்மடம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. தட்டார்மடம் சப்-இன்ஸ்பெக்டர் முகமது ரஷீக் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன் மற்றும் போலீசார் நடுவக்குறிச்சி பகுதியில் இளைஞர்கள் உட்பட பொதுமக்களிடம் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் நாம் நமக்காகவும் நம் சந்ததியினருக்காகவும் சாதி, மத வேற்றுமைகள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம், குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


Next Story