வராண்டாவில் செயல்படும் சமூக நலத்துறை அலுவலகம்


வராண்டாவில் செயல்படும் சமூக நலத்துறை அலுவலகம்
x

வால்பாறையில் 10 ஆண்டுகளாக சமூக நலத்துறை அலுவலகம் வராண்டாவில் செயல்பட்டு வருகிறது. எனவே அறை ஒதுக்கி தர வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் 10 ஆண்டுகளாக சமூக நலத்துறை அலுவலகம் வராண்டாவில் செயல்பட்டு வருகிறது. எனவே அறை ஒதுக்கி தர வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சமூக நலத்துறை

வால்பாறை பகுதி மக்களுக்கு சமூக நலத்துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பம் கொடுப்பது, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வதற்காக ஏராளமான பெண்கள் வருகின்றனர்.

ஆனால் வால்பாறை நகராட்சியில் சமூக நலத்துறை அலுவலர் கள் இல்லை. இதனால் ஆனைமலை ஊராட்சி ஒன்றிய அலவல கத்தில் இருந்து ஊர்நல அலுவலர் வால்பாறையில் முகாமிட்டு மனுக்களை பெற்று வருகிறார்.

அவர், முகாமிட்டு மனுக்களை பெறுவதற்காக வால்பாறை நக ராட்சி அலுவலக வராண்டாவில் இடம் ஒதுக்கி தரப்பட்டு உள் ளது. அதில் தான் கடந்த 10 ஆண்டுகளாக முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இதனால் அங்கு திருமண உதவித்திட்டம், கைம்பெண் மறு வாழ்வு உதவி திட்டம், 2 பெண்குழந்தை உதவி திட்டம், முதல் பெண் பட்டதாரி திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்கும் பெண் பயனாளிகளே வருகின்றனர்.

ஆனாலும் வராண்டாவில் மனுக்கள் வாங்கப்படுவதால் பெண்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதோடு வராண்டா வில் அமர்ந்து பணியாற்றும் ஊர்நல அலுவலரை சுற்றி ஆட்கள் நின்று கொண்டு இருப்பதால் பணியாற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது.

அதோடு வராண்டாவில் அலுவலகம் இயங்குவதால் ஆவணங் கள் மற்றும் விண்ணப்பங்கள் மாயமாக வாய்ப்பு உள்ளது. எனவே எனவே ஆனைமலையில் இருந்து வரும் ஊர்நல அலுவலர் பணி புரிய வசதியாக வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் சமூக நலத் துறைக்கு தனி அறை ஒதுக்க வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தனி அறை வசதி

இது குறித்து பெண்கள் கூறுகையில், ஆனைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சமூக நலத்துறையை சேர்ந்த அலு வலர், வாரத்திற்கு 3 நாட்கள் வால்பாறை நகராட்சி அலுவலகத் தில் முகாமிட்டு மனுக்கள் பெறுகிறார். ஆனால் அங்கு அவருக்கு அறை ஏதும் ஒதுக்கி தரப்பட வில்லை.

மாறாக அவர் வராண்டாவில் அமர்ந்து பணியாற்றுவதால் விண் ணப்பம் அளிக்கும் பெண்கள் வெயிலில் காத்து நிற்க வேண்டி உள்ளது. எனவே ஊர்நல அலுவலர் அமர்ந்து பணியாற்றி தனி அறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றனர்.


Next Story