கார் மோதியதில் சாப்ட்வேர் கம்பெனி உரிமையாளர் சாவு


கார் மோதியதில் சாப்ட்வேர் கம்பெனி உரிமையாளர் சாவு
x

ஆற்காடு அருகே கார் மோதியதில் சாப்ட்வேர் கம்பெனி உரிமையாளர் பலியானார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வேதகிரி தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 40). இவர், வீட்டிலேயே சாப்ட்வேர் கம்பெனி நடத்தி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஏழுமலை மோட்டார் சைக்கிளில் வேலூருக்கு சென்றுவிட்டு மீண்டும் ஆற்காடு நோக்கி வந்து கொண்டிருந்தார். மேல்விஷாரம் தனியார் ஓட்டல் அருகே வரும் போது பின்னால் வந்த கார் திடீரென ஏழுமலை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பூட்டுத்தாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை ஏழுமலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story