அனுமதியின்றி குளத்தில் வண்டல்மண் அள்ளப்படுவதாக பொதுமக்கள் புகார்


அனுமதியின்றி குளத்தில் வண்டல்மண் அள்ளப்படுவதாக பொதுமக்கள் புகார்
x

குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட விருகல்பட்டியில் அனுமதியின்றி குளத்தில் வண்டல்மண் அள்ளப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறியதை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர்

குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட விருகல்பட்டியில் அனுமதியின்றி குளத்தில் வண்டல்மண் அள்ளப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறியதை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பொதுமக்கள் புகார்

குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது விருகல்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வி.வல்லகுண்டபுரத்தில் உள்ள குளத்தில் முறைகேடாக மண் அள்ளப்படுகிறது. விவசாயிகள் என்ற போர்வையில் சிலர் முறைகேடாக அனுமதி பெற்று இரவு பகலாக மண் அள்ளி வருகின்றனர்.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக விவசாயிகளின் போர்வையில் மண் அள்ளிக்கொண்டிருக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

இது குறித்து தகவல் அறிந்த உடுமலை தாசில்தார் கண்ணாமணி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். விவசாயிகள் மண் எடுப்பதற்கும், விவசாயிகளுக்கு பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஒரு விவசாயிக்கு குறிப்பிட்ட அளவு மண் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. அதிகப்படியான மண் எடுக்க அனுமதி இல்லை.

இப்பகுதியில் அதிக அளவு மண் எடுத்து அருகில் உள்ள பகுதியில் சேமித்து வைத்து அதிக விலைக்கு விற்கும் நிலை உள்ளதால் வருவாய்த் துறையினர் உரிய கண்காணிப்பில் ஈடுபட்டு தகுதி உள்ள விவசாயிகளுக்கு மண் எடுக்க அனுமதி வழங்கி வேண்டுமென விவசாயிகள் தரப்பில் தாசில்தாரிடம் வலியுறுத்தபட்டது.

நடவடிக்கை

இது குறித்து முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் விவசாயிகளிடம் தெரிவித்தார். குளங்களில் அனுமதியின்றி வண்டல் மண் அள்ளக்கூடாது என்றும் அனுமதியின்றி வண்டல் மண் அள்ளுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து என்றும் வண்டல் மண் அள்ள பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.


Related Tags :
Next Story