நாளை சூரிய கிரகணம்: திருத்தணி முருகன் கோவில் வழக்கம்போல் திறந்திருக்கும்


நாளை சூரிய கிரகணம்: திருத்தணி முருகன் கோவில் வழக்கம்போல் திறந்திருக்கும்
x

திருத்தணி முருகன் கோவிலில் சூரிய கிரகணத்தால் கோவில் நடை மூடப்படாது என திருத்தணி கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்

சூரிய கிரகணம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி முதல் 6.20 வரை நடைபெறுகிறது. இந்த சூரிய கிரகணம் ஏற்படும் போது பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களில் கோவில் நடை அடைக்கப்படும்.

ஆனால் திருத்தணி முருகன் கோவிலில் சூரிய கிரகணத்தால் கோவில் நடை மூடப்படாது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என திருத்தணி கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story