சோளிங்கர் ஏரி நிரம்பி வழிகிறது


சோளிங்கர் ஏரி நிரம்பி வழிகிறது
x

ஆந்திராவில் பெய்து வரும் தொடர் மழையால் சோளிங்கர் ஏரி நிரம்பிவழிகிறது.

ராணிப்பேட்டை

ஆந்திராவில் பெய்து வரும் தொடர் மழையால் சோளிங்கர் ஏரி நிரம்பிவழிகிறது.

சோளிங்கர் ஏரி நிரம்பியது

கடந்த ஆண்டு இறுதியில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு அணைகள், ஏரிகள் நிரம்பின. அப்போது சித்தூர் மாவட்டம் கலவகுண்டா அணையில் இருந்து சுமார் 70 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேல்பாடி அணைக்கட்டில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்துவிப்பட்டது.

இதன் மூலம் ஏரிகள் நிரம்பியது. இந்தநிலையில் கடந்த இரண்டு வாரங்களாக அவ்வப்போது பெய்து வரும் கனமழை காரணமாக மேல்பாடி அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு கால்வாய் தண்ணீர் வரத்தால் ஏரிமுன்னூர், ரெண்டாடி, பெருங்காஞ்சி, நந்திமங்கலம் ஆகிய ஏரிகள் நிரம்பி கோடி போனது. இதன் மூலம் தற்போது சோளிங்கர் ஏரி முழுவதுமாக நிரம்பி மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது.

தடுப்பு அமைக்க வேண்டும்

கடந்த ஆண்டு மதகுகளில் தடுப்பு அமைக்கப்பட்டது. அந்த தடுப்புகளை மர்மநபர்கள் உடைத்து விட்டதால் 3 அடி தண்ணீர் வீணானது. அப்போது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதாவது இதனை தவிர்க்கும் விதமாக துறை சார்ந்த அதிகாரிகள் மதகுகளில் இரும்பு பலகைகள் கொண்டு தடுப்பு அமைக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story