தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது


தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது
x

வேலகவுண்டம்பட்டி அருகே தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகனை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

கொலை மிரட்டல்

வேலகவுண்டம்பட்டி அருகே பொம்மம்பட்டி, அல்லாளபுரத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 58). இவரது கணவர் கந்தசாமி. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். மகேஸ்வரிக்கு, குணசேகரன் (39) ராஜு, (37) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் ராஜு அடிக்கடி மது அருந்திவிட்டு தனது தாயிடம் சொத்துக்களை பிரித்து தருமாறு தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜு மது அருந்திவிட்டு வந்து தனது தாயை தகாத வார்த்தைகளால் திட்டி முகத்தில் தாக்கியுள்ளார். மேலும் கல்லால் தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த மகேஸ்வரியை அவரது மகன் குணசேகரன் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

கைது

சம்பவம் குறித்து மகேஸ்வரி வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்தார். இதையடுத்து தாயை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த ராஜுவை கைது செய்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் போலீசார் அவரை நாமக்கல் கிளைச்சிறையில் அடைத்தனர்.


Next Story