சோனியாகாந்தி பிறந்தநாள் விழா


சோனியாகாந்தி பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 10 Dec 2022 12:30 AM IST (Updated: 10 Dec 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் சோனியாகாந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல்

சோனியாகாந்தி பிறந்தநாள் விழா

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாள் விழாவையொட்டி திண்டுக்கல் மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காமராஜர் சிலை அருகே நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜாபேகம் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் துரைமணிகண்டன் முன்னிலை வகித்தார். முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

பின்னர் பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மை பிரிவு முன்னாள் தலைவர் சித்திக், மாவட்ட பொதுச்செயலாளர் சுமதி, பொதுக்குழு உறுப்பினர்கள் மச்சக்காளை, சிவாஜி, குப்புசாமி, மாநகராட்சி மண்டல தலைவர் கார்த்திக், கவுன்சிலர் பாரதி, இலக்கிய அணி தலைவர் ஜோதிராமலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வேடசந்தூர்

இதேபோல் வேடசந்தூர் அருகே உள்ள அய்யர்மடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியாகாந்தி பிறந்தநாள் விழாவையொட்டி கட்சி கொடி ஏற்றி, ஏழை எளிய மக்கள் 50 பேருக்கு கம்பளிபோர்வை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். கிராம கமிட்டி தலைவர் முத்துராஜ் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மூர்த்தி, வட்டார பொருளாளர் பகவான், வட்டார துணை தலைவர் ஜாபர்அலி மற்றும் எரியோடு நகர செயலாளர் சண்முகம், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோபால்பட்டி

சாணார்பட்டி வட்டார காங்கிரஸ் சார்பில் சோனியாகாந்தி பிறந்தநாள் விழா மற்றும் இமாசல பிரதேச தேர்தல் வெற்றி விழா கோபால்பட்டி பஸ்நிலையம் முன்பு நடந்தது. இதற்கு சாணார்பட்டி தெற்கு வட்டார தலைவர் ராஜ்கபூர் தலைமை தாங்கினார். வடக்கு வட்டார தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர். விழாவில் நிர்வாகிகள் சின்னச்சாமி, தாஸ் ஆனிமுத்து, மூக்கன், குமார், ஆதியான், பழனிசாமி, பிரபாவதி சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை நகர வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியாகாந்தி பிறந்தநாள் விழாவையொட்டி நடராஜர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கினர். நிலக்கோட்டை வட்டார காங்கிரஸ், தலைவர் கோகுல்நாத் தலைமை தாங்கினார். விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சி.நடராஜன், நகர தலைவர் பி.நடராஜன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் மாவட்ட துணைத்தலைவர் துரைசேகர், மாவட்ட செயலாளர்கள் முருகன், வேலாயுதம், நகர பொறுப்பாளர்கள் கணேசன், பவுன், பெருமாள், இளைஞர் அணி தொகுதி செயலாளர் கவுரிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story