நாளை ெசார்க்கவாசல் திறப்பு


நாளை ெசார்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் நாளை ெசார்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டம், கீழப்பாவூரில் உள்ள கிருஷ்ண சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நாளை (திங்கள்) மாலை

ெசார்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டை கடந்த 23-ந்தேதி முதல் வருகிற 12-ந்ேததி வரை 21 நாட்கள் தினந்தோறும் காலை 5 மணி முதல் 6 மணி வரை சுப்ரபாதம், கும்ப ஜபம், மா பொடி, மஞ்சள் பொடி, பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனத்தால் அபிஷேகம், மாலை 6 மணிக்கு சஹஸ்ரநாம பாராயணம், ஆண்டாள் பாசுரம், கோதா பிரபந்தம், சதுர்வேத பாராயணம் மற்றும் கீர்த்தனாவளி ஆகியன நடைபெற்று வருகின்றன.

வைகுண்ட ஏகாதசி தினமான நாளை காலை 5 மணிக்கு சுப்ரபாதம், கோ பூஜை, தொடர்ந்து காலை 10 மணி வரை சுவாமி ஸயன சேவை, பகல் 11 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு ெசார்க்கவாசல் திறப்பு, சுவாமி திருவீதி உலா, வேதபாராயணம், பஜனை, கோலாட்டம், கும்மி நடைபெறுகிறது. 12-ந் தேதி ஆண்டாள் திருக்கல்யாணத்துடன் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நிறைவு பெறுகிறது.



Next Story