எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 11-ந்தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை:

எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கீழ்க்கண்ட முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கம்.

  • திருப்பதி-காட்பாடி (வண்டி எண்:07581) இடையே காலை 10.55 மணிக்கும் மறுமார்க்கமாக காட்பாடி-திருப்பதி(07582) இடையே இரவு 9.55 மணிக்கும் புறப்படும் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 11-ந்தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்படுகிறது.
  • விழுப்புரம்-மயிலாடுதுறை(வண்டி எண்:06691) இடையே மதியம் 2.25 மணிக்கும் மறுமார்க்கமாக மயிலாடுதுறை-விழுப்புரம்(06690) இடையே காலை 6 மணிக்கும் புறப்படும் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 11-ந்தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்படுகிறது.
  • விழுப்புரம்-புதுச்சேரி(06737,06799) இடையே அதிகாலை 5.30 மணி மற்றும் மாலை 5.50 மணிக்கும் மறுமார்க்கமாக புதுச்சேரி-விழுப்புரம் (06738,06436) இடையே காலை 8.10 மணி மற்றும் இரவு 7.45 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 11-ந்தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்படுகிறது.

Next Story