தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை:வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல் விளக்கம்


தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை:வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல் விளக்கம்
x
தினத்தந்தி 7 Jun 2023 12:30 AM IST (Updated: 7 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தென் மேற்கு பருவமழை நேரத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை ஆற்றில், தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செயல்விளக்கம் செய்து காண்பித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நீலகிரி

கோத்தகிரி

தென் மேற்கு பருவமழை நேரத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை ஆற்றில், தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செயல்விளக்கம் செய்து காண்பித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தென்மேற்கு பருவமழை

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்வது வழக்கம். பருவமழை காலத்தில் பேரிடர்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், பேரிடர்கள் ஏற்படும் போது மீட்புப் பணியில் ஈடுபட அனைத்து அரசுத் துறைகளை சேர்ந்த அலுவலர்கள், தன்னார்வலர்கள் கொண்ட முதன்மை மீட்பு குழுக்கள் அமைத்து அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை, தீயணைப்புத் துறைகள் 24 மணி நேரமும் மீட்புப் பணிக்கு தயாரான நிலையில் இருக்குமாறு வைக்கப்படுகிறது. இந்தநிலையில் கோத்தகிரி தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு நிலைய அலுவலர் மாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பருவமழை நேரத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்பது குறித்து கோத்தகிரி அருகே கூக்கல்தொரை பகுதியில் உள்ள ஆற்றில் செயல்முறை விளக்கம் நடந்தது.

தத்ரூபமாக செய்து காண்பித்தனர்

இதில் தீயணைப்பு துறை வீரர்கள் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது, அவர்களை ஆற்றைக்கடந்து கயிற்றை கட்டி அழைத்து வருவது உள்ளிட்டவற்றை தத்ரூபமாக செய்து காண்பித்து செயல் விளக்கம் அளித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது என்பது குறித்தும் அவசர உதவிக்கான தொலைபேசி எண்கள் என்ன என்பது குறித்தும் விளக்கிக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தொடங்கியுள்ளதால், உயர் அதிகாரிகளின் அறிவுரைப்படி தீயணைப்புப்துறை சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த செயல் விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது என்று தெரிவித்தனர்.


Next Story