கருணாநிதி சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை


கருணாநிதி சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை
x

சுரண்டை கலைஞர் கோட்டத்தில் கருணாநிதி சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தென்காசி

சுரண்டை:

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் ஏற்பாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு சுரண்டையில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டு தினந்தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் 14-வது நாள் நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராஜா, பழனி நாடார், சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளிமுருகன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 100 நபர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக்முகமது, முன்னாள் நகர செயலாளர் முத்துக்குமார், முன்னாள் நகர செயலாளர்கள் ஆறுமுகசாமி, பூல் பாண்டியன், சாமுவேல் மனோகர், சக்தி, சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story