அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்


அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
x

அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் நாளன்று அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து அய்யப்ப சுவாமியை வழிபடுவது வழக்கம். மேலும் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அய்யப்ப சுவாமி சிலைகளுக்கு சிறப்பு நெய் அபிஷேகம் மற்றும் 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து, வண்ண மலர்களால் அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பித்து பக்தர்கள் வழிபட்டனர். இதையடுத்து சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செண்டை மேளம் முழங்க, வாண வேடிக்கையுடன், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன், அய்யப்பன், சிவன், பார்வதி உள்ளிட்ட சாமிகள் வேடம் அணிந்தவர்கள் நடனம் ஆடியபடி ஊர்வலமாக வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஊர்வலத்தின்போது வேடிக்கை பார்க்க வந்தவர்களிடையே ஏற்பட்ட தகராறால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


Next Story