அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்


அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
x

அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

கரூர்

புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆனி மாத முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் நொய்யல், சேமங்கி, அத்திப்பாளையம், உப்புபாளையம், புன்னம் மாரியம்மன், தவுட்டுப்பாளையம், திருக்காடுதுறை, நன்செய் புகழூர் உள்ளபட சுற்றுவட்டார பகுதிகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story