கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்


கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
x

கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்த பாலையூர் கிராமத்தில் உள்ள வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர் மாலைகள் மற்றும் அருகம்புல் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பாலையூர் மற்றும் அருகில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோல் மங்களமேட்டை அடுத்துள்ள சுகுந்த குந்தலாம்பிகை உடனுறை அபராத ரட்சகர் (குற்றம் பொறுத்தவர்) கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்மன் மற்றும் நந்தி பகவானுக்கு 18 வகையான வாசனை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நந்தி பகவான் மற்றும் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் சு.ஆடுதுறையை சுற்றியுள்ள கழனிவாசல், பெண்னகோணம், கீழக்குடிகாடு, ஒகளூர், அத்தியூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.


Next Story