கலைஞர் உரிமைத்தொகைக்காக சிறப்பு உதவி மையங்கள
கலைஞர் உரிமைத்தொகைக்காக சிறப்பு உதவி மையங்களை கலெக்டர் சங்கீதா அறிவித்து உள்ளார்.
கலைஞர் உரிமைத்தொகைக்காக சிறப்பு உதவி மையங்களை கலெக்டர் சங்கீதா அறிவித்து உள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் விண்ணப்பதாரர்களுக்கு உதவிடும் பொருட்டு தமிழக அரசால் புதிதாக kmut.tn.gov.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலையினை தாங்களாகவே தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது வீட்டிற்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்து கொள்ளலாம். இதற்கு கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 1100 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம். இவை தவிர விண்ணப்பங்களின் நிலையை தெரிந்து கொள்வதற்கு மதுரை மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகங்களில் உதவி மையங்கள் செயல்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் தங்களது குடும்ப அட்டை எண் விவரத்துடன் உதவி மையங்களில் நேரிலும், தொலைபேசி மூலமாகவும் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம். மேலும், கலைஞர் மகளிர் உரிமை தொகை கிடைக்க பெற்ற பயனாளிகளிடம் யாரேனும் தொடர்பு கொண்டு ஒ.டி.பி. (OTP) விவரங்களை கேட்கும்பட்சத்தில் தெரிவிக்க வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.