சென்னையிலிருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் - முன்பதிவு தொடக்கம்


சென்னையிலிருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் - முன்பதிவு தொடக்கம்
x

பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து பம்பைக்கு வருகிற 17-ந்தேதி முதல் விரைவு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை வரும் 17-ந் தேதி தொடங்குகிறது. சபரிமலை அய்யப்பனை தரிசன செய்ய தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் செல்வது வழக்கம். அவர்களின் வசதி கருதி சென்னையில் இருந்து பம்பைக்கு வருகிற 17-ந்தேதி முதல் விரைவு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணி மற்றும் 4 மணி என 2 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதில் பெரியவர்களுக்கு ரூ.1090, சிறியவர்களுக்கு ரூ.545 கட்டணம் ஆகும். இந்த அதிநவீன மிதவை சொகுசு பஸ் சேவை ஜனவரி 18-ந்தேதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்லும் சிறப்பு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு (இன்று) தொடங்கியுள்ளது. பயணிகள் www.tnstc.in மற்றும் TNSTC என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பெரியவர்களுக்கு ரூ.575, சிறியவர்களுக்கு ரூ.288 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.


Next Story