வருகிற 17-ந்தேதி முதல் சேலத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள்...!
வருகிற 17-ந்தேதி முதல் சேலத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சேலம்,
கார்த்திகை மாதம் வருகிற 17-ந்தேதி பிறக்க உள்ள நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை தொடங்க உள்ளது.
இதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்கு ஏற்ப வருகிற 17-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 18-ந்தேதி வரை சென்னை உள்பட தமிழக முக்கிய நகரங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி சேலத்தில் இருந்தும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், குழுவாக செல்வோர், மொத்தமாக பஸ்சை வாடகைக்கு எடுத்து பயணிக்க விரும்புவோர், அந்தந்த மாவட்டங்களில் உள்ள விரைவு போக்குவரத்து கிளை மேலாளரை அணுகலாம். தனி நபராக செல்வோர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் . குழுவாக செல்வோருக்கு சிறப்பு கட்டண சலுகை வழங்கப்படும் என தெரிவித்தனர்.