3 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்தது: குமரியில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்


3 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்தது: குமரியில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

3 நாட்கள் தொடர் விடுமுறை முடிவடைந்ததை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

3 நாட்கள் தொடர் விடுமுறை முடிவடைந்ததை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

தொடர் விடுமுறை

கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 19-ந் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையடுத்து சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறையாக அமைந்தது. இதனால் வெளியூரில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பலர் சொந்த ஊரான குமரி மாவட்டத்திற்கு வந்திருந்தனர்.

நேற்றுடன் 3 நாள் தொடர் விடுமுறை முடிந்ததையடுத்து சொந்த ஊருக்கு வந்த அனைவரும் அவரவர் வேலை பார்க்கும் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இவர்களுக்கு வசதியாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

பயணிகள் கூட்டம் அலைமோதல்

தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு 6 பஸ்களும், திருச்சிக்கு 3, திருப்பூருக்கு 2, தஞ்சைக்கு 1, மதுரைக்கு 20, சென்னைக்கு 1 என சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இதுபோல் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மீனாட்சிபுரம் பணிமனையில் இருந்து பெங்களூருக்கு 1, கோவைக்கு 1, சென்னைக்கு 2, மார்த்தாண்டம் பணிமனையில் இருந்து கோவைக்கு 1, சென்னைக்கு 2 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

இதனால் நேற்று மாலையில் வடசேரி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதுபோல் நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


Next Story