ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்


ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

திருவண்ணாமலை


திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

சிறப்பு பஸ்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களான போளூர் தாலுகா படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு பிரதி வாரம் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும்,

செங்கம் தாலுகா புதூர் மாரியம்மன் கோவிலுக்கு பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

சென்னைக்கு...

செய்யாறு தாலுகா முணுகப்பட்டு பச்சையம்மன் கோவிலுக்கு பிரதி வாரம் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளிலும் நடைபெறும் ஆடி மாத திருவிழாக்களை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருவண்ணாமலை மண்டலம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

மேலும் வார இறுதி நாட்களில் திருவண்ணாமலை மண்டலம் சார்பாக திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 20 பஸ்களும், போளூரில் இருந்து சென்னைக்கு 5 பஸ்களும் சிறப்பு பஸ்களாக இயக்கப்பட உள்ளது.

இந்த தகவலை அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story