நவதிருப்பதி கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்


நவதிருப்பதி கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

புரட்டாசி கடைசி சனிக்கிழமையொட்டி நவதிருப்பதி கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை:

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு வழிபாடுகள், கருட சேவைகள் நடைபெறுவது வழக்கம். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களுக்கு பக்தர்கள் அதிகளவு சென்று வழிபடுவார்கள். இதையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சனிக்கிழமைகளில் பக்தர்கள் நவதிருப்பதி தலங்களுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வரும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையையொட்டி நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு நவதிருப்பதி கோவில்களுக்கு மொத்தம் 4 பஸ்கள் புறப்பட்டன. பஸ்சில் பயணித்தவர்களுக்கு நெல்லை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் பிரசாத பை வழங்கி பயணத்தை தொடங்கி வைத்தார்.


Next Story