காரிமங்கலம் ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை திட்ட சிறப்பு முகாம்


காரிமங்கலம் ஒன்றியத்தில்  ஒருங்கிணைந்த வேளாண்மை திட்ட சிறப்பு முகாம்
x

காரிமங்கலம் ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் ஒன்றியம் திண்டல் கிராமத்தில் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வசந்த ரேகா பங்கேற்று ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், விவசாயிகள் நன்மை அடைவது குறித்தும் விரிவாக பேசினார். தொடர்ந்து பயனாளிகளுக்கு விசை தெளிப்பான்கள் வழங்கினார்.

இந்தநிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மோகன்தாஸ் சவுமியன், விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் விஜயகுமார், பேராசிரியர் வெண்ணிலா ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்து விளக்கி பேசினர். தொடர்ந்து கிஷான் கடன் அட்டை பயிர் காப்பீடு திட்டம் கால்நடை மருத்துவ முகாம் மற்றும் பட்டா மாறுதல் ஆகியவை குறித்து மனுக்கள் பெறப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற தலைவர் உமா குப்புராஜ், துணைத்தலைவர் தீபக் குமார், என்ஜினீயர் வடிவேல், உதவி வேளாண்மை அலுவலர்கள் மலர்விழி, சங்கீதா, வடிவேல், ஊராட்சி செயலாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பெரியாம்பட்டி பைசுஅள்ளி, அடிலம் உட்பட பல்வேறு ஊராட்சிகளில் நடந்த முகாம்களில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயலட்சுமி சங்கர், தீபா அன்பழகன், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story