மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டைக்கான சிறப்பு முகாம்


மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டைக்கான சிறப்பு முகாம்
x

மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டைக்கான சிறப்பு முகாம் 11-ந் தேதி முதல் நடக்கிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைக்கான மருத்துவச்சான்று மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கான விண்ணப்பம் வழங்கும் சிறப்பு முகாம் ஒன்றியங்கள் வாரியாக வருகிற 11-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. பள்ளிக்கல்வி துறையும் இணைந்து நடைபெறும் இந்த முகாம், 11-ந்தேதி செந்துறை ஒன்றியத்தில் செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும், 13-ந்தேதி திருமானூர் ஒன்றியத்தில் திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 18-ந்தேதி ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும், 19-ந்தேதி அரியலூர் ஒன்றியத்தில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 20-ந்தேதி ஆண்டிமடம் ஒன்றியத்தில் ஆண்டிமடம் புனித மார்த்தினார் மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், 27-ந்தேதி தா.பழூர் ஒன்றியத்தில் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறும். இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள் மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத மாணவ-மாணவிகள் இந்த முகாமிற்கு வருகை தந்து சமீபத்திய முகம் மட்டும் தெரியும்படியான பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பிறப்பு சான்று நகல் ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தெரிவித்துள்ளார்.


Next Story