மாற்றுத்திறனாளிகள் இலவச பயண சலுகை பெற சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகள் இலவச பயண சலுகை பெற சிறப்பு முகாம் 24-ந் தேதி நடக்கிறது.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசால் இலவச பயணச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளில் கல்வி பயில்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சையின் பொருட்டு செல்பவர்களுக்கு இலவச பயணச்சலுகை பெற்றிட வருகிற 24-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையத்தில் நடைபெறவுள்ளது.
மேலே குறிப்பிட்ட நாளன்று மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை (அனைத்து பக்கங்களும்), ரேஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் கல்வி பயில்பவர்கள் கல்வி நிறுவனத்தில் பெறப்பட்ட சான்று அல்லது பணிக்கு செல்பவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் பெறப்பட்ட சான்று அல்லது மருத்துவ சிகிச்சையின் பொருட்டு செல்பவர்களுக்கு டாக்டரிடம் பெறப்பட்ட சான்று போன்றவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3 போன்றவற்றுடன் காஞ்சீபுரம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் (மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில்) நேரில் வந்து விண்ணப்பித்து பயனடையுங்கள். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 044-29998040-ல் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.