வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்


வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
x

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது.

சிறப்பு முகாம்

நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதையொட்டி புதிதாக பெயர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் நடைபெறுகிறது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 1,484 வாக்குச்சாவடிகளில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.

விழிப்புணர்வு ஊர்வலம்

இதையொட்டி வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை டவுனில் நேற்று ஊர்வலம் நடைபெற்றது.

டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. இதனை நெல்லை தாசில்தார் மாணிக்கவாசகம், தேர்தல் தனி துணை தாசில்தார் உமா மகேஸ்வரி மற்றும் தலைமை ஆசிரியர் முத்துராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மாணவிகள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


Next Story