வீட்டுமனைகளை தனித்தனி பட்டாக்களாக இணையதளம் மூலமாக பதிவு செய்ய சிறப்பு வசதி


வீட்டுமனைகளை தனித்தனி பட்டாக்களாக இணையதளம் மூலமாக பதிவு செய்ய சிறப்பு வசதி
x

வீட்டுமனைகளை தனித்தனி பட்டாக்களாக இணையதளம் மூலமாக பதிவு செய்ய சிறப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட நகர் ஊரமைப்பு துணை இயக்குனரிடம் வீட்டுமனை அங்கீகாரம் பெறும் நில உரிமையாளர்கள் தங்களது வீட்டுமனைகளை அவர்களது பெயரிலேயே தனித்தனி பட்டாக்களாக பெறும் வசதி தமிழ்நில இணையதளத்தில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி கடந்த ஜனவரி மாதம் முதல் வீட்டுமனை அங்கீகாரம் பெற்ற உரிமையாளர்கள் தங்களது நிலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வீட்டுமனைகளுக்கு ஒரு வீட்டுமனைக்கு ரூ.400 வீதம் உட்பிரிவு கட்டணம் செலுத்தி பொது சேவை மையத்தில் பதிந்து கொண்டு பயன்பெறலாம். இதனால் நில உரிமையாளர் தனது வீட்டுமனையினை கிரயம் செய்யும் போது தங்களிடம் கிரயம் பெற்ற நபருக்கு தானியங்கி மூலம் பட்டா மாற்றம் செய்யப்பட்டு பயன் பெறலாம் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


Next Story