சிறப்பு கிராம சபை கூட்டம்


சிறப்பு கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கமுதி பகுதியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி ஊராட்சி ஒன்றியம், தலைவநாயக்கன்பட்டியில் மகளிர் உரிமை தொகைக்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் புளியம்மாள் மாரிமுத்து தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராம லிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் செப்டம்பர் 15-ந்தேதி மகளிர் உரிமை தொகை பெறுவது குறித்தும், பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர். இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜெயராமன், ஊராட்சி செயலர் முகம்மது ஹக்கீம், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் கீழராமநதி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் பழனி அழகர்சாமி தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊர் நல அலுவலர் (மகளிர் திட்டம்) ராசாத்தி முன்னிலை வகித்தார்.ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மைதீன், ஊராட்சி செயலர் முத்துராமு மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஆனையூர், பாக்குவெட்டி, பொந்தம்புளி, பெருநாழி, திம்மநாதபுரம், பேரையூர், காத்தனேந்தல் உள்ளிட்ட ஊராட்சிகளில் இந்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


Related Tags :
Next Story