மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்


மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 12 Oct 2023 1:00 AM IST (Updated: 12 Oct 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது.

கோயம்புத்தூர்
ஆனைமலை தாசில்தார் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் காலை 10 மணியில் இருந்து மதியம் ௨ மணி வரை நடைபெற்றது. முகாமில் பொள்ளாச்சி சப் -கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார். தாசில்தார் ரேணுகாதேவி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது குறைகளை தெரிவித்தனர். அதில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 119 மனுக்களை சப்-கலெக்டர் நேரடியாக சென்று மனுக்களை வாங்கினார். மேலும் அதில் உடனடி தீர்வாக மாற்றுத்திறனாளி சக்கர நாற்காலி மற்றும் செவிஒலி கருவி தலா ஒன்று வழங்கப்பட்டது. இதில் கூடுதல் தாசில்தார் அனுசியா, டெப்டிக் தாசில்தார் கருப்பையா மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய துறை அதிகாரிகள், மருத்துவர்கள், வருவாய் ஆய்வாளர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.




Next Story