மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது
கரூர்
கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்க சிறப்பு நாள் கூட்டம் நடத்திட அரசு ஆணையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வருகிற 11-ந்தேதி காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு நேரில் அளிக்கலாம்.
இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் பரிசீலக்கப்பட்டு தீர்வு காணப்படும். எனவே மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story