காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பு குறைதீர் வார கூட்டம்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பு குறைதீர் வார கூட்டம்
x

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் சிறப்பு குறைதீர் வார கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் சிவருத்ரய்யா தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம்

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா, பொதுமக்களிடம் இருந்து 287 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

வருகிற 25-ந்தேதி வரை சிறப்பு குறைதீர் வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு குறைதீர் வாரத்தில், காஞ்சீபுரம் வட்டம், மருதம் கிராமத்தை சேர்ந்த 3 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைபட்டாவும், 6 பயனாளிகளுக்கு முதியோர் மற்றும் இதர உதவித்தொகைகளும் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பிரகாஷ் வேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story