சிறப்பு மருத்துவ முகாம்


சிறப்பு மருத்துவ முகாம்
x

ஆம்பூர் அருகே நடந்த சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் தொடங்கிவைத்தார்.

திருப்பத்தூர்

ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். மேலும் சந்தை பகுதியில் தற்காலிக ஆரம்ப சுகாதார நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ஆம்பூர் தொகுதி வில்வநாதன் எம்.எல்.ஏ., மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார், துணைத் தலைவர் சாந்தி சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் ரவிக்குமார், ஒன்றியக் குழு உறுப்பினர் ஜோதி வேலு, வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்பாபு, ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story