சிறப்பு மருத்துவ முகாம்
சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
கரூர்
நொய்யல், மரவாபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள், வங்கிகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கும் சுகாதாரத்துறை சார்பில் மக்களைதேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு மேற்கண்டவர்களை பரிசோதனை செய்து உரிய மருந்து மாத்திரைகளை வழங்கினர். இதேபோல் அந்த பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story