சிறப்பு மருத்துவ முகாம்
வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் நேற்று கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு முகாமை தொடங்கிவைத்தார்.
முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, இதய சிகிச்சை. மகப்பேறு, மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், ரத்தம், சிறுநீர், சளி, தொழு நோய், காசநோய், குழந்தைகள் நலம் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் நெமிலி ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள், மாவட்ட துணை செயலாளர் துரை மஸ்தான், ஒன்றிய அவைத்தலைவர் நரசிம்மன், ஒன்றிய துணை செயலாளர் சீனிவாசன், காங்கிரஸ் ஒன்றிய தலைவர் நந்தகுமார், மருத்துவர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.