மேலப்பட்டியில், சிறப்பு மருத்துவ முகாம்
மேலப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
சிங்கம்புணரி
மேலப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
சிறப்பு மருத்துவ முகாம்
சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், மேலப்பட்டி ஊராட்சியில் உள்ள சமுதாயக்கூடத்தில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
முன்னதாக முகாமிற்கு வந்த அனைவரையும் மேலப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி சிவக்குமார், துணைத்தலைவர் முத்துமாரி ராஜபாண்டியன் ஆகியோர் வரவேற்றனர். ஒன்றிய குழு உறுப்பினர் கலைச்செல்வி அன்புச் செழியன், சிவகங்கை மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் கணேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பூமிநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் அம்பலமுத்து, சோமசுந்தரம், சிங்கம்புணரி நகர செயலாளர் கதிர்வேல், நகர அவை தலைவர் சிவக்குமார், பேரூராட்சி மன்ற துணை தலைவர் இந்தியன் செந்தில் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
கலந்து கொண்டவர்கள்
இந்நிகழ்ச்சியில், துணை இயக்குனர் (சுகாதாரத்துறை) விஜய்சந்திரன், சிங்கம்புணரி தாசில்தார் சாந்தி, சிங்கம்புணரி வட்டார மருத்துவ அலுவலர் நபீசாபானு, தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் சிவபுரி சேகர், நகர துணை செயலாளர் அலாவுதீன், மாவட்ட பிரதிநிதிகள் ஞானசேகரன், செல்வகுமார், தனுஷ்கோடி, சிவா ஷிப்பிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனர் சிவக்குமார், பிரான்மலை வனக்குழு தலைவர் செந்தில்குமார், பிரதிநிதி குடோன்மணி, தருண் மெடிக்கல் புகழேந்தி, மாவட்ட விளையாட்டு துறை துணை அமைப்பாளர் கோபால கண்ணன், கூட்டுறவு மேற்பார்வையாளர் வையாபுரி செந்தில், சிவபுரி கணேசன், தொழில்நுட்ப பிரிவு மாடன் சையது, மற்றும் அமுதன், கிருங்கை பிரதாப், திட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார், மேலப்பட்டி ஊராட்சி செயலர் நாகராஜன், மேலப்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ராஜேந்திரன், சாகுல் அமீது, ராமன், சண்முகவள்ளி, அமுதா மற்றும் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.