சிறப்பு மருத்துவ முகாம்


சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 4:46 PM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்குறிச்சியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

தென்காசி

கடையம்:

ஆழ்வார்குறிச்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் முரளிசங்கர் ஆலோசனை பேரில் கடையம் சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பழனிக்குமார் மேற்பார்வையில் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற இந்த முகாமை ஆழ்வார்குற்ச்சி பேரூராட்சி தலைவர் சரஸ்வதி சங்கர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் பூதபாண்டி முன்னிலை வகித்தார்.

முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி. பரிசோதனை, எலும்பு, காது, மூக்கு, தொண்டை, மனநலம், மகளிர், கண் மற்றும் பொது மருத்துவம், சித்த மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கினர். மேலும் குடும்ப நலம், காசநோய், தொழுநோய் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மருத்துவ முகாமில் மருத்துவர்கள் முகமது உமர், பாண்டியராஜன், சங்கரி, சூர்யா பிரபா, ரம்யா, ஆஷா பர்வீன், ரத்தனாதேவி ஆகியோர் கலந்து கொண்டு சிகச்சை அளித்தனர்.

முகாம் ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் பழனிக்குமார் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story