மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

ஆம்பூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
ஆம்பூர் கன்னிகாபுரம் அருகே உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் காதுகேளாதோர் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து அடையாள அட்டைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கினார்.
இதில் வில்வநாதன் எம்.எல்.ஏ., மாதனூர் ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார், ஒன்றியக்குழு துணைத்தலைவர் சாந்தி சீனிவாசன், ஆம்பூர் நகரமன்ற துணைத்தலைவர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story