டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள்


டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள்
x

டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் பெரம்பலூரில் 12 இடங்களில் நடந்தது.

பெரம்பலூர்

தமிழகத்தில் தற்போது பரவும் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் சுகாதாரத்துறை சார்பில் நேற்று மொத்தம் 1,000 இடங்களில் நடத்தப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்களுக்கான சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடந்தது. பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய வட்டாரங்களில் தலா 3 இடங்கள் என மொத்தம் 12 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடந்தது. இதில் டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கினர். முகாமில் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேல் சிகிச்சை தேவைப்படுவோரை டாக்டர்கள் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்து அனுப்பி வைத்தனர்.

1 More update

Next Story