காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை


காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 24 Sept 2023 2:00 AM IST (Updated: 24 Sept 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர்


காரமடை


காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


அரங்கநாதர் கோவில்


கோவை மாவட்டத்தில் வைஷ்ணவ தளங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதன்படி நேற்று புரட்டாசி சனிக்கிழமையையொட்டி காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாதர் சுவாமி, வெள்ளி சிம்மாசனத்தில் கோவிலை வலம் வந்து கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


திரளான பக்தர்கள்


புரட்டாசி சனிக்கிழமை என்பதால் காலை முதலே காரமடை அரங்காநாதர் கோவிலுக்கு திரளான பக்தர்கள் வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.


தொடர்ந்து பக்தர்கள், அரிசி, பருப்பு, காய்கறிகளை, கோவில் வளாகத்தில் இருந்த தாசர்களுக்கு படையலிட்டனர். பின் தாசர்களிடம் இருந்து சிறிதளவு காய்கறி, அரிசி, பருப்பு வகைகளை மடியேந்தி பெற்று வீட்டிற்கு கொண்டு சமைத்து சாப்பிட்டனர்.


அடுத்த மாதம் 15-ந் தேதி நவராத்திரி உற்சவம், 23-ந் தேதி மஹா நவமி சரஸ்வதி பூஜையும், 24-ந் தேதி விஜயதசமியையொட்டி குதிரை வாகனத்தில் அரங்கநாத பெருமாள் எழுந்தருளி அம்பு போடுதலுடன் நவராத்திரி உற்சவம் பூர்த்தி நடக்கிறது.


இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன் செய்து வருகிறார்.



Next Story