லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை


லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை
x

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் சுவாதி நட்சத்திர உற்சவத்தை முன்னிட்டு பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாலையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தங்க கேடயத்தில் பக்தோசிப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தனர். மங்கள வாத்தியங்களுடன் சுவாமி சன்னதி தெரு கோடி வரை சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story