மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை


மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 15 Sept 2023 3:45 AM IST (Updated: 15 Sept 2023 3:45 AM IST)
t-max-icont-min-icon

அமாவாசையை முன்னிட்டு ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த மாசாணியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனால் அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

அமாவாசையையொட்டி அம்மனுக்கு உச்சிபூஜை, சாயரட்ச பூஜை, தங்கமலர் அர்ச்சனை உள்ளிட்டபல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்கதர்கள் கலந்து கொண்டனர். கோவிலில் ஆனைமலை போலீசார் மற்றும் ஊர் காவலர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமாவாசையையொட்டி மதுரை, தேனி, கம்பம், திண்டுக்கல், பழனி, திருப்பூர், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் இருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


Next Story