சேலம் சுகவனேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜை


சேலம் சுகவனேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 5 Dec 2022 7:30 PM GMT (Updated: 5 Dec 2022 7:30 PM GMT)

பிரதோஷம், கார்த்திகை சோமாவரத்தையொட்டி சேலம் சுகவனேசுவரர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம்

பிரதோஷம், கார்த்திகை சோமாவரத்தையொட்டி சேலம் சுகவனேசுவரர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜை

சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். நேற்று பிரதோஷம் என்பதாலும், கார்த்திகை மாதம் 3-வது சோமவாரத்தையொட்டியும் நேற்று சுகவனேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை சுகவனேசுவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் 108 சங்காபிஷேகம் நடந்தது.

சாமி தரிசனம்

தொடர்ந்து மாலை கோவிலில் வெள்ளி ரிஷிப வாகனத்தில் பிரதோஷ நாயகர், பிரதோஷ நாயகியும், கார்த்திகை 3-வது சோமவாரத்தையொட்டி அதிகார நந்தி மேல் சோமவார மூர்த்தியும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சொர்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

கோவில் உள்பிரகாரத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story